எப்போதும் உங்கள் வீட்டில் கரண்ட் பில் அதிகமாக வருகிறதா?? அப்படியென்றால் நீங்கள் என்ன தவறு செய்கிறீர்கள்?அதனை எப்படி சரி செய்வது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்..
கம்ப்யூட்டரை சரியாக அணைத்து வையுங்கள்
நீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துவராக இருந்தால், கண்டிப்பாக உங்கள் கம்ப்யூட்டரைக் காலையில் ஒருமுறை ஆன் செய்தீர்கள் என்றால் பயன்படுத்தினாலும் சரி, பயன்படுத்தாவிட்டாலும் சரி, அன்று முழுவதும் ஆன் செய்தேதான் வைத்திருப்பீர்கள் இல்லையா??
அந்தத் தவறினை இனிமேல் செய்யாதீர்கள். நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தவில்லை என்றால் “ஸ்விட்ச் ஆப்” செய்து வைத்துவிட்டு, அதற்குப்பின் தேவைப்படும்போது “ஸ்விட்ச் ஆன்” செய்து கொள்ளுங்கள். இப்படி செய்வதால் உங்கள் கம்ப்யூட்டருக்கும் நல்லது, உங்களுக்கும் கரண்ட் பில் கொஞ்சம் குறைவாகும்..
தொலைபேசிக்கு அளவுக்குமீறி சார்ஜ் போடாதீர்கள்
நீங்கள் வயிறு முட்ட சாப்பிட்டு விட்ட பிறகு இன்னும் உங்களுக்கு சாப்பாடு கொடுத்துக் கொண்டே இருந்தால், நீங்கள் எப்படி சரியாக வேலை செய்யாமல் சோம்பேறியாகி விடுகிறீர்களோ?! அதேபோல் தான் நம் தொலைபேசியும், ஏற்கனவே உங்கள் தொலைபேசியில் சார்ஜ் புல்லாக இருக்கும்போது, நீங்கள் இன்னும் சார்ஜ் போட்டுக்கொண்டே இருந்தீர்கள் என்றால் தொலைபேசியில் சார்ஜ் நிக்காமல், சீக்கிரம் பேட்டரி போய்விடும். அத்தோடு மட்டுமில்லாமல் நம் வீட்டின் கரண்ட் பில்லும் எகிரிவிடும். அதனால் தொலைபேசியை எல்லா நேரங்களிலும் சார்ஜரில் போட்டுக் கொண்டே இருக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்..!
யாருமில்லாத அறையில் லைட், ஃபேன் எதுக்கு??
நான் பார்த்தவரை நம்மில் பாதிபேர் எந்தெந்த அறைக்குச் சென்றாலும் அந்தந்த அறையில் லைட், ஃபேன் என்று அனைத்தையும் ஆன் செய்துவிட்டு, அதற்குப்பின் வேறொரு அறைக்கு சென்று அங்குள்ள லைட், ஃபேன் எல்லாவற்றிற்கும் வாழ்வு கொடுக்க சென்றுவிடுவார்கள்.
அந்த மாதிரி தர்மப்பிரபுக்கள் ஒரு வீட்டிற்கு ஒருவராவது கண்டிப்பாக இருப்பார்கள். தயவுசெய்து அந்தத் தவறை செய்யாதீர்கள். அந்த மாதிரி செய்வதால். உங்களுடைய எனர்ஜியும் வேஸ்ட் ஆகும், கரண்ட்பில்லும் கண்டிப்பாக எகிரும். அதனால் அதில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
குளிர்காலத்தில் ஏ.சி எதற்கு??
ஒரு சில வீடுகளில் வெயில் காலமானாலும் சரி ,குளிர் காலமானாலும் சரி அவர்கள் தூங்க வேண்டும் என்பதற்காக எல்லா நேரமும் ஏ.சி ஓய்வில்லாமல் ஒடிக்கொண்டே இருக்கும். அப்படி செய்வதற்குப் பதிலாக மழை காலத்திலும், குளிர் காலத்திலும் நீங்கள் தூங்கும் அறையில் உள்ள ஜன்னல் கதவுகளைத் திறந்து வையுங்கள். வெளியே இருக்கும் இயற்கைக் காற்றே உங்கள் அறையைக் குளிர்ச்சிப்படுத்தும்.. அதன்மூலம் ஏ.சி க்காக பயன்படுத்தும் மின்சாரம் சேமிக்கப்படும்.
வெயில் காலத்தில் வெப்பத்தைக் குறைக்க?
வெயில் காலத்தில் சூரிய ஒளி நீங்கள் தூங்கும் அறையினுள் படாதவாறு முழுவதும் ஸ்க்ரீன் போட்டு வையுங்கள். இதனால் அந்த அறையானது அளவுக்கு அதிகமாக வெப்பமாகாது. அதற்குப்பின் நீங்கள் இரவில் ஏ.சி யைப் பயன்படுத்தும் போது அந்த அறை எளிதில் குளிர்ச்சியடைந்து விடுவதால் ஏ.சி க்கும் கொஞ்சம் வேலை எளிதாக இருக்கும். நமக்கும் கரண்ட் பில் குறைவாக வரும்.