மொறு மொறு ‘பொரி உருண்டை’ வீட்டிலேயே செய்யலாம்

Pori Urundai /Puffed Rice Balls – Cook & See

தேவையான பொருட்கள்: பொரி 1 1/2கப்

கட்டி வெல்லம் துருவியது -1/4 கப்

ஏலக்காய் தூள் ¼ தேக்கரண்டி

செய்முறை:

ஒரு வடசட்டியில் துருவிய வெல்லம் சேர்த்து, மிதமான சூட்டில் வெல்லம் கரையும் வரை விடவும். பின் அதில் உள்ள தூசிகளை நீக்குவதற்கு வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய வெல்லப்பாகுவை மீண்டும் வடசட்டியில் வைத்து மிதமான சூட்டில் நன்றாக  காய்ச்சவும் ( உருண்டை பதம் வரும் அளவுக்கு) பதம் வந்தவுடன், அடுப்பை அணைத்து அதில் பொரி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறிவிட வேண்டும். சூடு சற்று ஆறியதும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக கைகளை அழுத்தி உருண்டையாக பிடிக்கவும்.

இப்போது, பொரி உருண்டை ரெடி. குழந்தைகளுக்கு மாலை நேர நொறுக்குத்தீனியாக இதை தரலாம்.

குறிப்பு: பொரி உருண்டை பிடிக்கும் போது நன்றாக அழுத்தி பிடிக்கவும். மொறு மொறுவென்று இருக்கும் பொரியை (சவுத்து போகாமல்) உபயோகிக்கவும், அப்போதுதான் சுவை நன்றாக இருக்கும்.

என்னங்க… பொரி உருண்டை செய்ய தயார் ஆகிட்டிங்க போல!

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version