ருசியான புதினா, கொத்தமல்லி தோசை  

தேவையான பொருட்கள்:

தோசை மாவு 2 கப்,

கொத்தமல்லி – 3/4கப்,

புதினா ஒரு கைப்பிடி,

கறிவேப்பிலை ஒரு கொத்து,

இஞ்சி சிறிய துண்டு,

பூண்டு 5 பல்,

புளி சிறிது,

உப்பு (தேவையான அளவு)

செய்முறை:

புதினா, கொத்தமல்லியை  நன்றாக கழுவி நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, புளி,கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை என ஒவ்வொன்றாக போட்டு வதக்கி கொள்ளவும். இதை மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து நைசாக  அரைத்துக் கொள்ளவும்.

இதை தோசைமாவில் கலந்து பின்பு தோசையாக வார்த்து எடுத்தால் புதினா, கொத்தமல்லி தோசை ரெடி. இதற்கு தேங்காய் சட்னியை தொட்டு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

– பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version