வாரம் ஒரு முறை நல்லெண்ணெயை கொண்டு ஆயில் புல்லிங் (எண்ணெயை கொண்டு வாய் கொப்பளித்தல்) செய்து வர நிறைய பலன்கள் கிடைக்கும்.
ஆயில் புல்லிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
- உமிழ்நீரின் காரத்தன்மை பாதுகாக்கப்படும்.
- மருத்துவ மூலக்கூறுகள் வாயில் உள்ள மென் திசுக்கள் மூலமாக உறிஞ்சப்பட்டு ரத்த ஓட்டத்தில் கலந்து செயல்பட தொடங்கும்.
- பல் இடுக்கில் உள்ள உணவுத்துகள்கள் வெளியேறும்.
- இதன்மூலம் வாய் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
- தொண்டை வறட்சி, நாவறட்சி, வாய்ப்புண், நாக்கில் உண்டாகும் புண்கள், உமிழ்நீர் குறைவாக சுரத்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் தீரும்.
- பல் ஈறுகளில் வரும் ரத்தக் கசிவு, புண், வாய் திசுக்களில் ஏற்படும் புண், நாக்கு பகுதியில் உண்டாகும் புண்களுக்கு திரிபலா சூரணம் நிவாரணம் தரும்.
- அதை(திரிபலா சூரணத்தை) 200 மி.லி நீரில் கலந்து சூடுசெய்து வடிகட்டி தேன் கலந்து வாய் கொப்பளித்து வரவேண்டும்.
- சைனஸ் தொந்தரவால் அவதிப்படுபவர்கள் உண்டாகும் மூக்கடைப்பு, தலைபாரம், தொண்டைவலி, பல் ஈறுவீக்கம் போன்றவற்றிற்கு லவங்கம்,சுக்கு, மிளகு, மஞ்சள், சீரகம், போன்றவற்றை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி வாய் கொப்பளித்து வர விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
-பா.ஈ.பரசுராமன்.