வெஜ் போஹா செய்யலாம் வாங்க

தேவையான பொருட்கள்:

சிவப்பு அவல்

கேரட் ,

பட்டாணி,

 உருளைக்கிழங்கு,

பீன்ஸ்

கடுகு

சீரகம்

வறுத்த வேர்கடலை,

முந்திரி,

எலுமிச்சை சாறு,

கொத்தமல்லி, கறிவேப்பிலை

செய்முறை:

கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அவலுடன் தண்ணீர் சேர்த்து கழுவி பின்பு தண்ணீரை வடிகட்டவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் அதனுடன் காய்கறிகளை சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து தெளித்து மூடி வேக விடவும். பிறகு அவல், உப்பு, சர்க்கரை (சிறிதளவு) சேர்த்து கிளறி மூடி சிறிதுநேரம் வேக விடவும். நன்கு வெந்த பிறகு எலுமிச்சை சாறு பிழிந்து வேர்கடலை,முந்திரி கொத்தமல்லித்தழையை தூவி இறக்கினால் வெஜ் போஹா ரெடி.

Exit mobile version