ருசியான ’பொட்டட்டோ ஆம்லெட்’ செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

முட்டை 5

உருளைக்கிழங்கு 2

மிளகாய் 2

பெரிய வெங்காயம் 1

கறிவேப்பிலை

கொத்தமல்லி

உப்பு (தேவையான அளவு)

செய்முறை:

கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும். அதனுடன் வெங்காயம், உருளைக்கிழங்கு, கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளவும். தோசைக்கல்லில் வெண்ணெயை தடவி இந்த கலவையை ஊற்றி ஆம்லெட் போல வேகவிடவும். நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான பொட்டட்டோ ஆம்லெட் ரெடி.

Exit mobile version