சுவையான புதினா இட்லி பொடி

தேவையான பொருட்கள்:

தனியா 2 டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு 2 டேபிள் ஸ்பூன்

உளுத்தம்பருப்பு 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் ½ டீஸ்பூன்

மிளகு ½ டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் 5

வெந்தயம் ¼ டீஸ்பூன்

புதினா ஒரு கைப்பிடி அளவு

பூண்டு 5 பல்

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி முதலில் தனியாவை வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.பின் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின் காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, வெந்தயம் சேர்த்து வறுக்க வேண்டும். பின் புதினா மற்றும் பூண்டை வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது, மிக்சியில், அனைத்தையும் போட்டு சிறிது உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் புதினா இட்லிபொடி ரெடி. இதில், நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு சாப்பிடலாம்.

Exit mobile version