இருமல், சளி & இரைப்பினை குணமாக்கும் தூதுவளை சூப்

தேவையான பொருட்கள்:

தூதுவளை இலைகள்

பூண்டு 5 பல்

இஞ்சி தோல்சீவியது

கறிவேப்பிலை

கொத்தமல்லி

புதினா

மிளகுதூள்

துளசி இலைகள்

எலுமிச்சை சாறு 2 டீஸ்பூன்

சின்ன வெங்காயம்

செய்முறை:

சின்னவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பின்பு  வாணலியில் தூதுவளை இலைகள், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லித்தழை, புதினா & துளசி இலைகளுடன் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து கொதிக்க விடவும். பிறகு இதை வடிகட்டி மிளகுதூள், எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கினால் தூதுவளை சூப் ரெடி. இது சளி, இருமலை நீக்கக்கூடியது. இரைப்பு தொல்லையினை குணமாக்கக்கூடியது.

Exit mobile version