தேவையான பொருட்கள்:
அவல் 1 கப்,
பால் 100 மிலி
வெல்லம் 1 கப்
நெய்
ஏலக்காய்
முந்திரி
பாதாம்
செய்முறை:
வாணலியில் சிறிது நெய் ஊற்றி, ஏலக்காய், முந்திரி, பாதாம் போன்றவற்றை பொன்னிறமாக வறுத்து அரைக்கவும்.
பின் ஒரு பாத்திரத்தில் அவலை கொட்டி சூடான பால், வெல்லம், நெய் மற்றும் அரைத்து வைத்திருக்கும் பொடி சேர்த்து உருண்டை பிடித்தால் அவல் லட்டு தயார். இதை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.