விநாயகர் சதுர்த்தி ஷ்பெஷல் வாழைப்பழ கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

கொழுக்கட்டை மாவு 1 கப்

வாழைப்பழம் – 4

தேங்காய் துருவல் – 1 கப்

கண்டன்ஸ்டு மில்க் – ¾ கப்

நெய்

ஏலக்காய் பொடி

செய்முறை:

வாழைப்பழத்தை இரண்டாக வெட்டி இட்லி பாத்திரத்தில் போட்டு ஆவியில் 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவேண்டும். பின் அதன் தோலை நீக்கிவிட்டு நன்றாக மசித்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் நெய் ஊற்றி சூடானதும் அதில், துருவிய தேங்காயை போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின் அடுப்பை அனைத்துவிட்டு லேசான சூட்டிலேயே மசித்து வைத்த வாழைப்பழம், கண்டன்ஸ்டு மில்க், ஏலக்காய் பொடி சேர்த்து பூரணத்தை தயார் செய்துகொள்ள வேண்டும். பின்பு கொழுக்கட்டை மாவை கிண்ணம் வடிவில் செய்து அதற்கு நடுவே இந்த பூரணத்தை வைத்து மூடி, மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் வாழைப்பழ கொழுக்கட்டை ரெடி. இந்த கொழுக்கட்டையை வைத்து படையுங்கள். விநாயகர் உங்கள் வீட்டிற்கு ஓடோடி வருவார்.

Exit mobile version