தினை தேங்காய்ப்பால் அப்பம் செய்யலாம் வாங்க

தேவையான பொருட்கள்:

தேங்காய் – அரைமூடி

தினை – 200 கிராம்

பொடித்த வெல்லம் – ஒரு கப்

வாழைப்பழம் – 1

ஏலக்காய்த்தூள்

நெய்

செய்முறை:

தேங்காயை துருவி பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.தினையை வறுத்து மாவாக அரைக்கவும். பின்பு வெல்லத்தை கரைத்து வடிகட்டி, அதனுடன் தேங்காய்ப் பால், தினைமாவு, ஏலக்காய்த்தூள், வாழைப்பழம் சேர்த்து நன்கு கெட்டியாக கரைக்கவும்.

குழிப்பணியாரக்கல்லில் நெய்விட்டு மாவை ஊற்றி மிதமான தீயில் பொன்னிறமாக வேகவைத்து எடுத்தால் தினை தேங்காய்ப்பால் அப்பம் ரெடி.

Exit mobile version