தேவையான பொருட்கள்:
பாதாம் 20 கிராம்
பிஸ்தா 20 கிராம்
முந்திரி 20 கிராம்
திராட்சை & பேரீச்சை 20 கிராம்
பால் ½ லிட்டர்
சேமியா ¼ கப்
ஏலக்காய்தூள்
சர்க்கரை
நெய்
செய்முறை:
பாதாம், பிஸ்தா என அனைத்தையும் (நட்ஸ் வகைகள்) தனித்தனியே நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சேமியாவையும் வறுத்துக்கொள்ள வேண்டும். பின் பாலை நன்றாக காய்ச்சி கொதி வந்ததும் சேமியாவை சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். வெந்ததும் தீயின் வேகத்தை குறைத்து சர்க்கரையை தேவைக்கு ஏற்ப சேர்த்து கலக்க வேண்டும். பின் வறுத்த நட்ஸ் வகைகள், திராட்சை, பேரீச்சை சேர்த்து இறக்கினால் நட்ஸ் பாயாசம் ரெடி.