ஆட்டுக்கறியின் நன்மைகள்!

நம் எல்லோரும் வாரம் ஒருமுறையாவது ஆட்டுக்கறி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளோம். ஆனால் அது நம் உடல்நலத்துக்கு எவ்வாறு உதவுகிறது?? என்பது உங்களுக்குத் தெரியுமா?? தெரிந்துகொள்ளுங்கள்!..

ரத்த சோகையை குணப்படுத்துகிறது

நம் ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி குறையும்போது, ரத்த சோகை என்னும் நோய் உண்டாகிறது. அப்போது ஆட்டு இறைச்சியைத் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், நம் உடலின் ரத்த சிவப்பணுக்களை அதிகரித்து ரத்த சோகை நோயைக் குணப்படுத்தும்.

இரும்புச் சத்து நிறைந்தது

தொடர்ச்சியாக ஆட்டுக் கறி சாப்பிட்டு வந்தால், நம் உடலில் இரும்புச் சத்துக் குறைபாடு வராமல் இருக்கும். கர்ப்பமாக இருப்பவர்களுக்கு இரும்புச் சத்து அதிகமாக தேவைப்படுவதால், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஆட்டுக்கறி சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்களுக்கு இரும்புச் சத்துக் குறைபாடும், ரத்தசோகையும் வராமல் தடுக்கும்.

தசைப் பராமரிப்பு

ஆட்டுக்கறியில் உயர்தரப் புரதங்கள் அடங்கியுள்ளதால், தசைப் பராமரிப்புக்கு உதவுகிறது.உடலுக்குத் தேவையான ஒன்பது வகை அமினோ அமிலங்களும் இதில் அடங்கியுள்ளதால், ஆட்டுக் கறி என்பது ஒரு முழு புரோட்டின் உணவாகக் கருதப்படுகிறது.

உடல் எடை அதிகரிக்க

ஆட்டுக்கறித் தசைகளை வலுப்பெறச் செய்து உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. ஆகவே எப்போதும் ஜிம் மிற்கு சென்று தன் உடல் எடையை அதிகரிக்க முயற்சிப்பவர்கள் ஆட்டு இறைச்சியை சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் நல்ல முன்னேற்றம் தெரியும்.

தசைச் செயல்பாட்டிற்கு உதவுகிறது

ஆட்டுக கறியானது “பீட்டா அலனைன்” என்ற அரிதான அமினோ அமிலத்தைக் கொண்டுள்ளது. இது தசையின் செயல்பாட்டிற்கு அவசியம் தேவைப்படும் ஒன்றாகும். ஆதலால் இது தசை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் நம்மைப் பாதுகாக்க உதவுகிறது.

அதனால் சைவ உணவு சாப்பிடுபவர்பளுக்குத் தசை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், அசைவ உணவுகள் சாப்பிடுபவரைவிட அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது..

பார்ரா! ஆட்டுக் கறியில் இவ்வளவு மகிமை இருப்பதால் தான் நம் ஊரில் பொங்கலுக்கு, தீபாவளிக்கு, உறவுக்காரர்கள் வரும்போது,போகும்போது என்று எல்லா விஷேஷ நாட்களிலும் ஆட்டுக்கறி எடுத்து சமைக்கும் பழக்கம் இருந்திருக்கும்போல!

பின்குறிப்பு

ஆனாலும் மக்களே ஆட்டுக்கறியில் கூடவே கொழுப்பும் அடங்கியுள்ளதால் அளவுக்கு அதிகமாக வெளுத்துக் கட்டாமல், அளவோடு சாப்பிட்டால், நமக்கும் நல்லது, ஆட்டிற்கும் நல்லது!

Exit mobile version