பருக்களை போக்கணுமா? இதோ சில வழிகள்!

பெண்களை மட்டுமின்றி ஆண்களையும் பாடாய் படுத்தும் ஓர் சரும பிரச்சனையெனில் அது முகப்பரு/பிம்பிள் தான். பொதுவாக எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டவர்கள் தான் இந்த பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். அதோடு ஹார்மோன்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது பிம்பிளை உண்டாக்கும். இப்படி வரும் பருக்கள் முக அழகை கெடுக்கும் வண்ணம் இருக்கும். இதை மறைக்க பெண்கள் மேக்கப் போட்டு மறைப்பார்கள். ஆனால் இச்செயலால் சருமத்துளைகள் அடைக்கப்பட்டு, பருக்கள் மேலும் தான் மோசமாகும்.

பெரும்பாலானோர் இந்த பருக்களை வேகமாக ஒரே இரவில் போக்குவது எப்படி என்று இன்டர்நெட்டில் தேடுவார்கள். நீங்களும் அத்தகையவர்களுள் ஒருவரானால், இக்கட்டுரை உங்களுக்கானது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகள் முகத்தில் அசிங்கமாக காணப்படும் பருக்களை ஒரே இரவில் போக்க உதவும். இந்த வழிகளால் பருக்கள் முழுமையாக போகாவிட்டாலும், கண்களுக்கு தெரியாதவாறு மிகச்சிறியதாக சுருக்கும்.

ஐஸ் கட்டி

ஐஸ் சருமத்தை அமைதியடையச் செய்வதோடு, பருக்கள் பெரிதாவதைத் தடுக்கும். மேலும் இது வீக்கத்தையும் குறைக்கும்.

* ஒரு மஸ்லின் துணியில், ஐஸ் கட்டிகளை வைத்து சுற்றிக் கொள்ள வேண்டும்.

* பின் அதை பருக்களின் மீது 20 நொடிகள் வைக்க வேண்டும்.

* பிறகு 5 நொடிகள் இடைவெளி விட்டு, மீண்டும் 20 நொடிகள் வைக்க வேண்டும்.

* இப்படி சில முறை செய்ய வேண்டும். இதனால் அப்பகுதி சிவந்து போகலாம். ஆனால் மெதுவாக சரியாகிவிடும்.

டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ ஆயில் முகப்பருவால் அவஸ்தைப்படுபவர்களுக்கு சிறப்பான பொருள். இதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளதால், பருக்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, வேகமாக போக்க உதவும்.

* ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில், 2 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த எண்ணெய் கலவையை பிம்பிள் மீது தடவி 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு அந்த பகுதியை நீரால் கழுவவும்.

* இப்படி தினமும் 2 முறை செய்தால், வேகமான பலன் கிடைக்கும்.

ஆஸ்பிரின் மாத்திரை தசைவலி, தலை வலி, பல் வலி போன்றவற்றை சரிசெய்ய உதவுவதோடு மட்டுமின்றி, பருக்கள் மற்றும் பிம்பிளைப் போக்கவும் உதவும். ஏனெனில் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

* ஆஸ்பிரின் மாத்திரையை பொடி செய்து, அதில் 2-3 துளிகள் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் அதை இரவு தூங்கும் முன், பிம்பிள் மீது தடவ வேண்டும்.

தேனில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், வீக்கத்தைக் குறைக்க உதவும். அதற்கு இரவு தூங்கும் முன் தேனை பிம்பிள் மீது தடவிக் கொண்டு, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம், ஒரே நாளில் பருக்கள் மாயமாய் மறையும்.

க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சிறப்பான அளவில் நிறைந்துள்ளது. இது பருக்களைப் போக்க உதவும். அதற்கு சிறிது க்ரீன் டீயை தயாரித்து, நன்கு குளிர்ந்த பின், அதை பிம்பிள் மீது தடவ வேண்டும். இல்லாவிட்டால் க்ரீன் டீ தயாரித்த பின்பு, அந்த பைகளை நேரடியாக பிம்பிள் மீது வைக்கலாம். இதனாலும் பருக்கள் காணாமல் போகும்.

கையாள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

பிம்பிள் வந்தால் தவறாமல் பின்பற்ற வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

* பிம்பிளை கிள்ளுவதற்கு முயலக்கூடாது. இதனால் அதில் உள்ள பாக்டீரியாக்கள் சருமத்தில் தடவி, மற்ற இடங்களிலும் பருக்களை ஏற்படுத்தக்கூடும்.

* அடிக்கடி பருக்களைத் தொடாதீர்கள். இது தொற்றுக்களை உண்டாக்கும்.

* முகப்பருக்களின் நிலைமையை கட்டுப்படுத்த வீட்டு வைத்தியங்களை மேற்கொள்ளளவும். ஒருவேளை பருக்கள் மோசமாக இருந்தால், தோல் மருத்துவரை அணுகவும்.

* சரும தொற்றுக்களைத் தடுக்க எப்போதும் சுத்தமான துணியைப் பயன்படுத்த வேண்டும்.

Exit mobile version