பாதங்களைப் பராமரிப்பது இவ்வளவு ஈசியா!!

பாதத்தைப் பராமரிக்க அழகு நிலையம் சென்று, பெடிக்யூர் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.இனி வீட்லேயே பாதத்தை எளிய முறையில் பராமரிக்கலாம். எப்படி சுலபமா பராமரிப்பதுனு பார்போம் வாங்க.

பெண்களில் நிறைய பேருக்கு பெரும் பிரச்சனையாக இருப்பதே பாதத்தில் இருக்கின்ற வெடிப்பு தான்.அதனால் ஒரு காலணி வாங்கும் போதுக் கூட பார்த்து பார்த்து வாங்க வேண்டியிருக்கிறது.ஒரு ஃபங்ஷன் செல்லும் போதுக் கூட யாராவது கால பார்த்தா என்ன சொல்லுவாங்கலோனு யோசிச்சே, சில சமயம் நாம விரும்புற டிரஸ் கூட போட முடியாமல் போவதுண்டு.

இந்த பிரச்சனைக்கெல்லாம் ஏதாவது தீர்வு இருக்கானு கேக்குறீங்களா? கண்டிப்பா இருக்குதுங்க. இங்க கொடுத்துருக்குறத, வாரம் 3 நாள் மட்டும் செஞ்சு, முறையா பாதத்தை பராமரிச்சீங்கனா போதும்.நீங்களும் தைரியமா, பாதத்தை பத்தி கவலைப்படாமல் வாழலாம்.உங்களுக்கும் தன்னம்பிக்கை வரும்.

மஞ்சள்தூள்

மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. கிழங்கு மஞ்சளைப் பொடியாக்கி, சுத்தமான விளக்கெண்ணெய் / நல்லெண்ணெயில் / தேங்காய் எண்ணெயில் சேர்த்து வெடிப்பு இருக்கும் இடங்களில் தடவி வந்தால் பாதத்தில் இருக்கும் வலியும், எரிச்சலும் நீங்கும்.அதோடு மட்டுமல்லாமல் வெடிப்பும் மறையும்.

வாசலின் மற்றும் எலுமிச்சை சாறு

இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இது மிகவும் எளிதும் கூட. வாசலினில் இருக்கும் பெட்ரோலியம் ஜெல்லி வெடிப்பை போக்கி, மிருதுவான பாதத்தை தரக்கூடும். வாசலின் – 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு- ½ ஸ்பூன் எடுத்து நன்றாக கலந்து, பாதங்களில் தடவி சிறிது நேரம் கழித்து பாதங்களை கழுவவும்.இப்படி தொடர்ந்து செய்து வரும்போது, நீங்களே வித்தியாசத்தை பார்க்க முடியும்.

ஆயில் மசாஜ்

வறண்ட பாதத்தை சரி செய்ய ஆயில் மசாஜ் ஒரு சிறந்த வழி. தேங்காய்/ஆலிவ்/பாதாம் எண்ணெய் கொண்டு பாதங்கள், கால் விரல்கள், நகங்கள், குதிங்காலில் மசாஜ் செய்து வர நல்ல மாற்றத்தை உணர முடியும்.அட நம்ம காலா இது என்று ஆச்சரியமடைவீர்கள்.

வேப்பிலை, மருதாணி, மஞ்சள்

வேப்பிலை, மருதாணி, மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து வெடிப்பு இருக்கும் இடத்தில் தடவி நன்றாக காயவிடுங்கள். காய்ந்ததும் மிதமான சூடுடைய தண்ணீர் கொண்டு கழுவுங்கள். அதிகப்படியான வெடிப்பையும் இது குணமாக்கவிடும்.


Exit mobile version