இஞ்சியின் மகிமை அறிந்தவர்கள் நிச்சயம் இதனை உணவில் சேர்த்துக்கொள்ள தவறமாட்டார்கள்! நீங்கள் எப்படி?

உடலின் செரிமான தன்மை உள்பட பலவற்றிற்கு உதவியாக இருக்கும் இஞ்சியின் முக்கியத்துவம் குறித்து அறிந்துவிட்டால் தினமும் இதனை பயன்படுத்த யாரும் மிஸ் பண்ண மாட்டாங்க.. வேறு என்ன சிறப்பு இதில் இருக்குதுன்னு தெரிஞ்சுக்கலாமா?
இஞ்சி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பல்வேறு பாதிப்புகளை இன்றும் சந்தித்துவருகிறது. இதற்கான மருந்தினை கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகள் தவித்துவரும் நிலையில் சித்த மருத்துவமனை மக்கள் நாடத்தொடங்கிவிட்டனர். அதிலும் குறிப்பாக நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க வேண்டும் என இஞ்சியினை அதிகளவில் மக்கள் தற்போது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமில்லை இன்னும் பல நோய்களை குணப்படுத்த இஞ்சி உதவியாக உள்ளது என்றே சொல்லலாம்.

செரிமானப்பிரச்சனை குணப்படுத்தும் இஞ்சி

நாம் உண்ணும் உணவு செரிமானத்தன்மையை அடையாவிட்டால் நிச்சயம் பல்வேறு பாதிப்புகள் நம் உடலில் ஏற்படக்கூடும். பொதுவாக எச்சில், செரிமான அமிலம், கல்லீரல் சுரக்கும் நொதியான பைல் போன்ற இந்த 3 திரவங்கள் தான் செரிமானத்துக்கு முக்கியமானவையாக உள்ளது. எனவே இதில் எந்த பாதிப்பும் இல்லாமல் இந்த திரவங்கள் எல்லாம் சுரப்பதற்கு இஞ்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதனால் இதனை நம் உணவில் சேர்த்துக்கொண்டால் நிச்சயம் செரிமானப்பிரச்சனையே இருக்க வாய்ப்பில்லை.

இஞ்சியைத் தட்டி தண்ணீரில் கொதிக்க வைத்த பின்னர் தேன் கலந்து பருகினால் செரிமான பிரச்சனை அகலக்கூடும். காலையில் இதுப்போன்று செய்து பருகினால் செரிமான மண்டலம் சுத்தமாகி அதன் செயல்பாடு மேலும் அதிகரிக்ககூடும். இதோடு இஞ்சி பித்தத்தை தடுக்கக் கூடியது என்பதால் வாந்தியை கட்டுப்படுத்தி வயிறு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். 

சளி, இருமல் மருத்து

சளி, இருமல், ஜலதோஷம் இருப்பவர்களுக்கு கைகண்ட மருந்துகளில் ஒன்று இஞ்சியும் தான். இது குளிர் காலத்தில் வெப்பம் தரும் உணவுகளில் ஒன்றாக இருப்பதால் சளி மற்றும் இருமல் வந்தால் உடனடியாக ஒரு கப் இஞ்சி டீ அருந்தினால் அது உங்கள் உடல் நலத்தை சீராக வைத்திருக்க உதவியாக இருக்கும்

இதோடு இஞ்சியை தினமும் உணவில் சேர்த்து வர இன்சுலின் சுரப்பை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது . மேலும் இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. இதனால் கல்லீரல் சுத்தம் செய்யப்பட்டு, ரத்த ஓட்டம் மேம்படுத்தப்படும்.

Exit mobile version