30 வயதுக்கு மேலும் கிளியர் சருமம் வேண்டுமா? அப்ப இதை ட்ரை பண்ணுங்க!!

இன்றைய மாசு நிறைந்த உலகில், தலை முதல் கால் வரை சரும பிரச்னைகள் வயது வித்தியாசம் பார்க்காமல் எட்டிப் பார்க்கத் தொடங்கிவிடுகிறது. அதிலும் பெண்களுக்கு 20 வயதை தாண்டினாலே முகத்தில் சுருக்கம், டல்னஸ் உள்ளிட்ட பல சிக்கல்கள் ஏற்படுகிறது. 30 வயதை தொட்ட பின் முகம் வயதானது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு ஆரோக்கியமாக சாப்பிட்டாலும், சரும பாதுகாப்பும் அவசியமானது. பியூட்டி பார்லர் சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்யாமல் ஒரே ஒரு முட்டையை வைத்து முகத்தை எப்படி அழகாக பராமரிப்பது என்பதைப் பற்றி பார்க்கலாம்.

நம் அனைவருடைய வீட்டிலும் இருக்கும் பொருள்களை வைத்து தான் இந்த பேஸ் பேக் செய்யப் போகிறோம்.என்னவெல்லாம் பொருள்கள் தேவைப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.

முகச் சுருக்கம்

முட்டையின் உள்ள மஞ்சள் கருவை எடுத்து நன்றாக அடித்து அதனுடன் நன்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய்யை கலந்து முகத்தில் மசாஜ் செய்து அதை அப்படியே பேஸ் பேக் போல போட வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்தால் சருமத்தில் புதிய செல்கள் உருவாவதோடு, தளர்வடைந்த சருமத்தை இறுக்கி முக சுருக்கத்தை மறையச் செய்யும்.

முகப் பொலிவு

முட்டையின் வெள்ளைக் கருவுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து முகம் மற்றும் கழுத்தில் நன்றாக தடவுங்கள். காய்ந்ததும் முகம் கழுவ வேண்டும். அதேபோல வெள்ளைக் கருவுடன் 2 ஸ்பூன் கடலை மாவு 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் மாஸ்க் போல போடலாம். இது முகத்தில் உள்ள அழுக்கை நீக்கி வெண்மையான தோற்றம் தரும். வாரம் ஒருமுறை இதை செய்யலாம். வெயிலில் சுற்றிய பின் வீட்டுக்கு வந்ததும், இந்த முறையை செய்து பாருங்கள். ரிசல்ட்டை பார்த்து அசந்துவிடுவீர்கள்.

முகப் பாதுகாப்பு

முட்டையின் வெள்ளைக் கருவுடன் முல்தானி மட்டியை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதேபோல  2 ஸ்பூன் கேரட் சாறுடன் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம். வாரம் ஒருமுறை இப்படி செய்வதால் 30 வயதை தாண்டினாலும், முகம் இளமையான தோற்றத்தை தரும். முகம் அழகுக்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டியதும் அவசியம்.

Exit mobile version