உடல் எடைக் குறைக்கணுமா?எலுமிச்சையின் அற்புதங்கள்!!!

நம்மில் பலர் உடல் எடையைக் குறைக்க பல வழிகளை பயன்படுத்தி இருப்போம்.எளிய முறையில் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க எலுமிச்சை எவ்வாறு உதவுகிறது என இப்போது பார்க்கலாம்.

காலை எழுந்தவுடன் பல் துலக்கிய பின் வெந்நீர் மற்றும் எலுமிச்சை சாறு குடிக்கும் பழக்கம் நம்மில் பலரிடம் உண்டு.அதற்கு காரணம் உடலில் உள்ள கொழுப்பு கரையும் என்பதே.இனி எலுமிச்சை சாற்றுடன் ஒரு அரை ஸ்பூன் மிளகு தூள் சேர்த்துக் குடித்துப் பாருங்க விரைவில் உடல் எடை குறைவது தெரியும்,

எலுமிச்சை – மிளகு

ஒரு டம்ளர் எலுமிச்சைச் சாறோடு ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்து குடிக்க வேண்டும்.பிறகு ஒரு மணி நேரம் கழித்துதான் சாப்பிட வேண்டும்.அதற்கு முன் டீ,காபி ஏதும் அருந்தக் கூடாது.மிளகில் உள்ள கேப்சைசின் உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டி, கொழுப்பு செல்களைக் கரைக்கும்.

எலுமிச்சை சாறு – இஞ்சி

இரவு தூங்கப் போவதற்கு முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு இஞ்சை சீவிப் போட்டு இரவு முழுவதும் ஊறவிட்டு,காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரைக் இஞ்சியுடன் அப்படியே குடிக்க வேண்டும்.இதனால் கொழுப்பு செல்கள் கரையும்.

Exit mobile version