காலையில் எழுந்ததும் சின்ன வெங்காயம் சாப்பிட்டு பாருங்க, உடல் எவ்வளவு ஆரோக்கியமா இருக்கும்னு நீங்களே தெரிஞ்சுக்கிவீங்க?

நோய் எதிர்ப்பு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சின்ன வெங்காயத்தை தினமும் காலையில் எழுந்ததும் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்கிறார்கள். எந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியத்தை சின்ன வெங்காயம் தருகிறது என்பது பற்றி பார்க்கலாம்.

வெங்காயம் பல்வேறு நாடுகளில் மருந்துப்பொருளாக பயன்படுத்தப்பட்டுவருகிறது. குறிப்பாக நம் முன்னோர்கள் காலத்தில் எந்த வித மருத்துவ வசதியும் இல்லாத காலக்கட்டத்தில் இந்த சின்ன வெங்காயம் தான் பல நோய்களை குணமாக்கியது என்பார்கள் நம் பாட்டிமார்கள். தலைவலியில் தொடங்கி உடலில் ஏற்படும் செரிமான பிரச்சனை வரை தீர்த்து விடும் என்று சொல்லும் போது, நாமும் இந்த சின்ன வெங்காயத்தினை நம் அன்றாட சேர்ந்துக்கொண்டால் நல்லது தானே. எப்படி இதனை பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்..

காலையில் சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்:

சின்ன வெங்காயத்தை தினமும் காலையில் மென்று தின்று நீராகாரம் பருகி வந்தால் நன்கு உழைக்கும் ஆற்றல் நம்முடைய உடலுக்கு கிடைக்கிறது. சுறுசுறுப்பாக நாள் முழுவதும் இயங்கவும்,. உடலில் உள்ள சூட்டினை குறைக்கவும் பயன்படுகிறது.

மேலும் வெங்காயத்தை சிறு துண்டுகளாக்கி அதை நீரில் ஊறவைத்துக்கொண்டு, நன்கு வெங்காய துண்டுகள் ஊறியதும் நீரை வடிகட்டி எடுத்து வைத்துக்கொண்டு காலையிலும் மாலையிலும் அந்த நீரை அருந்த வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 15 முதல் 20 நாட்கள் வரை அருந்தி வந்தால் இரத்த மூலம் எளிதில் குணமாகும். உடல் சூட்டை தணிக்க கூடிய சின்னவெங்காயம் மூலச்சூட்டைத் தணிக்கும் ஒரு நல்ல மருந்தாக இருக்கிறது. மருத்துவ மனைக்கு சென்று இந்நோய்க்கு எந்தவித ஆபரேசன் செய்யமலே குணமாகும் என்கிறது நம் பாட்டி வைத்தியம்.

வெங்காயம் பக்கவாத நோய்களை வரவிடாமல் செய்யும் தன்மை கொண்டதாக உள்ளது. தினமும் பச்சையாக வெங்காயத்தை காலை வேளையில் வரும்பொழுது பக்கவாத நோய்கள் வராது.

காலை வேளையில் இந்த சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வரும்பொழுது சிறுநீரகம் சம்பந்தமாக உள்ள பிரச்சினைகள் தீரும்.

காலையில் நாம் மென்று விழுங்கும் வெங்காயமானது நம் செரிமான பாதையில் செல்லும் பொழுது அதனுடைய நெடி சுவாசப் பாதையில் உள்ள அத்தனை விஷக் கிருமிகளையும் அழித்துவிடுகிறது. உள்ளே செல்லும் வழியில் உணவு குழாய் மற்றும் காலியான இரைப்பையை அடைந்து விஷக் கிருமிகளைக் கொன்று விடும் ஆற்றம் கொண்டது.

எனவே நம் உடலில் ஏற்படும் சிறு சிறு நோய்கள் பெரிய அளவில் மாறி நமக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் நிச்சயம் நாம் வெங்காயத்தை தினமும் நம்மோடு சேர்த்துக்கொள்ள வேண்டும். தினசரி மூன்று சிறிய வெங்காயம் தானே உரித்து சாப்பிடுவோம் நீண்ட நாள் நோயின்றி வாழ வழிவகை செய்வோம்.

Exit mobile version