தற்போது உள்ள கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு ஏதும் நடக்காததால் வீட்டில் இருக்கும் நடிகர்கள் தம் வீட்டில் நடக்கும் சுவாரஸ்ய நிகழ்வுகளை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தெலுங்கு திரைஉலகில் “க்ரீன் இந்தியா”எனப்படும் வீட்டில் செடி வைக்கும் “சேலஞ்ச்” ட்ரெண்ட் ஆகி வருகிறது இதன் மூலம் ஒரு நடிகர், நடிகை வீட்டில் செடி வைத்து விட்டு மற்றவருக்கு “டேக்”செய் கின்றனர் அந்த வகையில் நடிகைகள் ரஷ்மிக்கா மந்தனா, ராசி கண்ணா வரிசையில் நடிகை சமந்தா தன் வீட்டில் செடி வைத்து “சேலஞ்ச்” அசிஸ்ப்ட்டேட் என்று டேக் செய்துள்ளார்.
தன் மாமனார் மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகரான நாகார்ஜூனா சமந்தா உடன் செடி வைத்தார். இதன் மூலம் மரம் வைப்பதின் முக்கியத்துவம் குறித்து ரசிகர்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் என பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.