ஆறு வருடங்கள் காத்து இருந்து எடுத்த புகைப்படம் வைரல் ஆனது….

ஒரு புகைப்பட கலைஞர் ஆறு வருட தவத்திற்கு கிடைத்த ஒரு அரிய புகைப்படம் படம் “ட்ரெண்ட்”ஆகி வருகிறது.

புகைப்படம் என்பது நமது கடந்த கால நினைவுகளை நினைவு படுத்தும் ஒரு நிலைக்கண்ணாடி. இப்போது இருக்கும் உலக தொழில் நுட்ப வளர்ச்சியில் இன்று அனைவரின் செல்போனிலும் கேமரா வந்துவிட்டது. அதில் தங்கள் நினைவுகளை பதிவு செய்கின்றனர். ஆனால் இத்துறையில் வல்லுநர்கள் எடுக்கும் புகைப்படத்திற்கு ஒரு பெரும் மதிப்பு உள்ளது.

இந்த புகைப்படத்துறையிலும் பல வல்லுநர்கள் உள்ளனர் இவர்கள் கல்யாணம், விளம்பரம், வன விலங்கு போன்ற பல துறைகளில் கை தேர்ந்த புகைப்பட வல்லுனர்களாக உள்ளனர்.
இவர்களில் மிகவும் சிரமத்துடன் புகைப்படம் எடுப்பவர்கள் “வைல்ட் லைப் போட்டோ கிராபர்ஸ்”என அழைக்கப்படும் வனவிலங்குகளை படம் பிடிப்பவர்கள் தான்.

காடுகளில் புகைப்படம் எடுப்பவர்களால் அவ்வளவு சுலபமாக ஒரு விலங்கை புகைப்படம் எடுக்க முடியாது. நாட்கணக்கில் காத்து இருக்க வேண்டும். அப்படி ஒருவர் சுமார் ஆறு நாட்கள் ஒரே இடத்தில் இருந்து கருஞ்சிறுத்தையும், சிறுத்தையும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை எடுத்து பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் “வைரல்” ஆகி வருகிறது. இந்த தருணத்திற்குதான் தாம் கடந்த ஆறு வருடங்களாக காத்து இருந்ததாக அந்த புகைப்பட கலைஞர் தன் பதிவில் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version