எம்.பி திருச்சி சிவா செய்தியாளர் சந்திப்பு

எதிர்கட்சிகளின் குரல் மதிக்கப்படுவதில்லை என திமுக எம்.பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி நிறைவடைந்த நிலையில் முன்கூட்டியே அவை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி சிவரா, இன்று அவை ஒத்தி வைக்கப்பட்டிருப்பதற்கு காரணம் அதானி வியாபார பிரச்சினை. இந்திய நாட்டின் பொருளாதாரத்தின் மீதும், தனித்தன்மையின் மீதும் பல்வேறு வினாக்கள் எழுந்துள்ளன. உலக அளவில் இது பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிற போது இந்த பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென நாங்கள் கேட்டோம். மிக பிரச்சினைகள் உருவாகும் போது அது பற்றி கூட்டத்தொடரில் விவாதிப்பது என்பது வழக்கமான ஒன்று. ஆனால் அது பற்றி பேசுவற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டினார். கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றோம். அரசு அதையும் மதிக்கவே இல்லை. அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. நாங்கள் கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானங்களை அவைத்தலைவர் ஏற்கவில்லை. மக்களை, பொருளாதாரத்தைப் பாதித்திருக்க பிரச்சினைகளைப் பற்றி பேச எதிர்கட்சிகள் அனுமதிக்கப்படவில்லை. கோரிக்கையும் மதிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். ஆளுகின்ற அரசு பதில் சொல்லவும், விளக்கம் தரவும் தயாராக இல்லை. இது ஜனநாயக நாட்டில் நாடாளுமன்ற நெறிமுறைகளுக்கு முரணானது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி குரல் எழுப்பி வந்தோம். ஜனநாயகம் கேள்விக்குறியாகி இருக்கிறது. எவ்வளவு உரக்க குரல் எழுப்பினாலும் எதிர்கட்சிகளின் குரலுக்கு மரியாதை வழங்கப்படுவதில்லை. இது ஆரோக்கியமான போக்கு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version