பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் பெண் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு… ஜூலை 25ல் பதவியேற்பு

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

செல்லுப்படியான 4701 வாக்குகளில் 2,824 வாக்குகள் (மொத்த மதிப்பு 6,76,803) பெற்று திரவுபதி முர்மு வெற்றிப்பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹா 1,877 வாக்குகள் (மொத்த மதிப்பு 3,80,177) பெற்று தோல்வியை தழுவினார். திரவுபதி முர்முவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர் நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக வரும் 25ம் தேதி (ஜூலை 25) பதவியேற்கவுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் திரவுபதி முர்மு பல்வேறு பெருமைகளை பெறுகிறார்.

1.பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர்.

2. நாட்டின் 2வது பெண் குடியரசுத் தலைவர் (முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் 2007-2012)

3.நாடு விடுதலைப்பெற்ற பின் பிறந்த முதல் குடியரசுத் தலைவர்.

Exit mobile version