டெல்லி புறப்படும் அண்ணாமலை

வரும் ஏப்ரல் இறுதியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிப் பேச்சு வார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என தீவிரம் காட்டி வருகின்றன. தேசிய கட்சியான பாஜகவோ இன்னும் களம் இறங்கவில்லை. கூட்டணியையும் இறுதி செய்யவில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது. ஆனால் டெல்லி மேலிடம் அதிமுகவை கூட்டணியில் இணைத்து விடும் என்று தெரிகிறது. ஏற்கனவே கூட்டணியில் இருந்த அன்புமணி, ஜி.கே.வாசன், ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் மதில் மேல் பூனையாகத் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கூட்டணி குறித்த ஆலோசனை பெறுவதற்காக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி செல்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா, ஜே.பி.நட்டா, சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. மேலும் மாநில பாஜகவின் என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இது குறித்த ஆலோசனையும் இக்கூட்டத்தில் இடம்பெற உள்ளது. டெல்லியிலிருந்து திரும்பி பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version