வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் உண்டா?

ஜல்சக்தி துறைக்கு திமுக எம்.பி ஆர்.கிரிராஜன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

ஆர். கிரிராஜன் எம்.பி எழுதிய கடிதத்தில், சென்னை போன்ற நகரங்களில் வெள்ளத்தடுப்பு மற்றும் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு மற்றும் புதிய நீர்த்தேக்கங்கள் கட்டுவது போன்ற ஏதாவது திட்டங்களை அரசு வகுத்திருக்கிறதா, அப்படியானால் அது குறித்த விவரங்கள், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை, அதில் விநியோகிக்கப்பட்ட தொகை மற்றும் தமிழ்நாடு அரசு 2017 ஆம் ஆண்டு தொடங்கி வருட வாரியாக அதற்காக செலவிட்ட தொகை ஆகிய தகவல்கள்; மற்றும் சென்னை நகரத்துக்கான திட்டங்களின் பட்டியல் மற்றும் அவை குறித்த விவரங்கள் வேண்டும் எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதில் அளித்துள்ள ஜல் சக்தித்துறை துணை அமைச்சர், ஸ்ரீ பிஸ்வேஸ்வர் டூடு, புதிய நீர்பிடிப்பு தேக்கங்கள் கட்டுவது, மழை நீர் சேகரிப்பு, வெள்ளத்தடுப்பு மற்றும் மேலாண்மை தொடர்பானவை உட்பட பல நீர் வள ஆதாரத்திட்டங்கள் வகுக்கப்பட்டு, அவற்றுக்கான நிதி வழங்கப்பட்டு அவை மாநில அரசுகள் தங்களின் சொந்த வள ஆதாரங்கள் மற்றும் முன்னுரிமைகளின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் மத்திய அரசின் பங்கு அதற்கான ஊக்குவிப்பு, மற்றும் தொழில்நுட்ப ஆதரவு வழங்குதல் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் கீழானவற்றில் ஒரு சில அடையாளம் காணப்பட்ட திட்டங்களுக்கு பகுதி நிதியுதவி வழங்குதல் ஆகியவற்றோடு வரையறுக்கப்படும். மேலும் அதற்குக் கூடுதலாக மாநிலங்களுக்கிடையே மேற்கொள்ளப்பட வேண்டிய பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான தொழிநுட்ப – பொருளாதார முன்மொழிவுகள் இந்த அமைச்சகத்தின் கீழுள்ள மத்திய நீர் வள வாரியத்தினால் (CWC) மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக இந்தியா அரசு மேற்கொண்டுவரும் முன்முயற்சிகள் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாயீ யோஜனாவின் கீழான பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான – தீவிரமாக விரைவாக்கப்பட்ட நீர்ப்பாசன பயன்பாட்டுத் திட்டம் (PMKSY-AIBP), அந்த குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட பகுதி மேம்பாடு & நீர் மேலாண்மை (CAD&WM) அமலாக்கத்துக்கு அதே அளவிலான நிதித் தேவைகளுக்கு பகுதியளவு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் PMKSY-AIBP இன் கீழான திட்டங்களின் படி புதிய நீர்த்தேக்கங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
PMKSY-ஹர் கேத் கோ பானி இன் கீழான மேற்பரப்பு சிறு அளவு நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ், மத்திய நிதிஉதவி இந்தியா அரசால் வழங்கப்படுகிறது. மேற்பரப்பு சிறு நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது, அவற்றில் சில நீர்த்தேக்கங்களை உருவாக்குவதை உள்ளடக்கி இருக்கும். PMKSY இன் நீர்நிலை மேம்பாட்டுக் பகுதி நிலவளத் துறையால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நீர்பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு மத்திய உதவி வழங்கப்படுகிறது.

வெள்ள மேலாண்மை திட்டத்தின் (FMP) கீழ் இந்த அமைச்சகம் மூலம் நதிநீர் மேலாண்மை, வெள்ளக் கட்டுப்பாடு, வெள்ள நீரைக்கட்டுப்படுத்துதல், நில அரிப்புத் தடுப்பு வடிகால் மேம்பாடு, வெள்ள தடுப்பு பணிகள், சேதமடைந்த வெள்ள மேலாண்மைப் பணிகளை மீண்டும் மேற்கொள்ளுதல், பணிகள், கடல் அரிப்பு தடுப்பு மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதி சுத்திகரிப்பு தொடர்பான பணிகளை மாநில அரசுகள் மேற்கொள்வதற்காக மத்திய உதவி வழங்கப்படுகிறது.

ஜல் சக்தி அபியான் வருடாந்திர பிரச்சாரங்களின் கீழ் மற்றவற்றுக்கிடையில் இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளால், மேற்கொள்ளப்பட்ட கவனத்தோடு கூடிய இடையீட்டு முயற்சிகளில் மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகளும் அடங்கும். நிலத்தடி நீரை அதிகரிக்கவும் மேம்படுத்தவும் பூமிக்கடியிலான அணைகள், மண் அணைகள், கட்டுப்பாட்டு அணைகள், தடுப்பு அணைகள் போன்ற கட்டமைப்புகள் மற்றும் பொது கட்டிடங்களில் கூரை மேல் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் போன்ற இயற்கை வள ஆதார மேலாண்மை, நீர் பாதுகாப்பு மற்றும் நீர் சேகரிப்பு கட்டமைப்புக்கள் தொடர்பான பொதுப் பணிகளை மேற்கொள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (MNREGS) வழங்கப்பட்டிருக்கிறது. 2017 ஆம் ஆண்டில் இருந்து இந்த அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கபப்ட்ட தமிழகத்திற்கான நிதி விவரங்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ளன

(i) PMKSY-AIBP தமிழ்நாட்டில் “திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு ஆறுகளை இணைக்கும்திட்டம் அதாவது கன்னடியன் கால்வாயில் இருந்து வறட்சி பாதித்த பகுதிக்கு வெள்ளநீரைக் கடத்தும் கால்வாய் அமைத்தல்” திட்டம் 2021-22 நிதியாண்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக அனுமதிக்கப்பட்ட மத்திய உதவி ரூ. 44.22 கோடி ஆகும். இதில் ரூ. 9.04 கோடி 2021-22 இல் விடுவிக்கப்பட்டு அது பயன்படுத்தப்பட்டுவிட்டது.

(ii) PMKSY- ஹர் ஹாத் கோ பானி – நீர்நிலைகளைப் பழுது பார்த்தால், புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்பு:
பழுதுபார்த்தல்,சீரமைப்பு, புதுப்பித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக எட்டு நீர்நிலைத் தொகுப்புக்களுக்கான நிதி உதவி சேவைகள் மேற்கண்ட திட்டத்தின் கீழ் இந்த அமைச்சகத்தால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நீர்நிலைத் தொகுப்புக்களுக்கான இந்தத் திட்டத்தின் கீழ் 2017 ஆண்டு முதல் மத்திய அரசின் உதவியாக அனுமதிக்கப்பட்ட மொத்தத் தொகை ரூ.186.53 கோடிக்கு எதிராக வழங்கப்பட்ட தொகைகள் பின்வருமாறு:

  1. 2017-18 – இல்லை
  2. 2018-19 – ரூ. 7.03 கோடி
  3. 2019-2020- ரூ. 16.75 கோடி
  4. 2020-21 – ரூ. 1.25 கோடி
  5. 2021-22 – ரூ. 17.43 கோடி
  6. 2022-23 (இன்று வரை) – ரூ. 19.3 கோடி

இந்த அமைச்சகம் அது சேவை செய்யும் திட்டங்களின் கீழ் சென்னை நகரம் தொடர்பான நிதியுதவி கோரி எந்த முன்மொழிவையும் பெறவில்லை என பதில் அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version