வி.கே சசிகலாவிற்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருந்த நிலையில், பினாமி சொத்து சட்டத்தின் கீழ் சசிகலாவின் சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதில் சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ₹100 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா சொத்தை முடக்கி வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.