234 தொகுதிகளிலும் திமுக கனவில்தான் வெற்றிபெறும்: எடப்பாடி பழனிசாமி

திமுக தலைவர் ஸ்டாலின் எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் என கனவு காண்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.


இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் உரையாற்றிய முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மக்கள் கிராம சபை என்ற பெயரில் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். அது மக்கள் கிராமசபைக் கூட்டம் அல்ல. அது மக்களை ஏமாற்றுகின்ற நாடக கூட்டம் என்று விமர்சித்தார்.


கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி கடந்த நாடாளுமன்ற தேர்தல் திமுக வெற்றிபெற்றதாக குற்றம்சாட்டிய அவர், மீண்டும் மக்கள் ஏமாற தயாராக இல்லை. அதிமுக ஆட்சி தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.ஏனெனில், நான் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியதிலிருந்து மக்கள் வெள்ளம் அலைகடலென திரண்டு வருவதை காணமுடிகிறது எனக் கூறினார்.

read more: ஆளுநருக்கு அழுத்தம்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!


திமுக தலைவர் ஸ்டாலின் எப்பாடியாவது முதலமைசராக வேண்டும் என்று வெறிகொண்டு, 24 மணிநேரமும் கனவு கண்டுகொண்டு இருக்கிறார். தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்பினால் கூட நான் முதலமைச்சர் ஆவேன், முதலமைச்சர் ஆவேன் என்று கூறிக்கொண்டு தான் இருக்கிறார். எங்களுக்கு அந்த ஆசை இல்லை. இங்கு இருக்கும் அனைவரும் முதலமைச்சர் தான் என்றார். திமுக 234 தொகுதியிலும் ஜெயிக்கும் என கனவு கண்டுகொண்டு இருக்கிறார். அது கனவில் மட்டுமே நடக்கும். நிஜத்தில் நடக்க வாய்ப்பில்லை எனவும் முதல்வர் கூறினார்.

Exit mobile version