கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் நிதியுதவி: தமிழக அரசு வெளியிட்ட அரசாணை!!

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உச்சநீதிமன்ற உத்தரவுபடி தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பதிற்கும் ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். மாநில பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே நிவாரணம் பெற்றவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு பெற்றோர்களை இழந்து ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம் நிவாரணம் பெற்றவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தாது. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version