தமிழக சட்டசபை தேர்தல் நடத்த ரூ. 621 கோடி நிதி!!!

சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதற்கு தமிழக அரசிடம் செலவு தொகையாக 621 கோடி ரூபாய் நிதி கோரப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டபேரவை தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுப்பட்டு வருகிறது.  கடந்த டிசம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணைய பொது செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழு தமிழக அரசு தலைமை செயலாளர் மற்றும் பல்வேறு அரசு செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி சென்றது.

அப்போது தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்த செலவு தொகையாக 621 கோடி ரூபாய் நிதி கோரியுள்ளதாக கூறினார். கொரோனா பரவல் காரணமாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையும், தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை அவர்களுக்கான செலவீனங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் செலவு தொகைதொகை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போதய கொரோனா வைரஸ் நிலவரம் குறித்தும், கொரோனா பரவல் காலத்தில் தேர்தல் நடத்தும் போது பின்பற்ற வேண்டிய இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் குறித்தும் நேற்று முதற்கட்ட ஆலோசனை நடத்தியதாகவும் அடுத்தக்கட்ட ஆலோசனை விரைவில் நடத்தவுள்ளதாக கூறினார். இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், திட்டமிட்டப்படி வரும் 20 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் சத்யபிரதசாகு  தெரிவித்தார்.

Exit mobile version