7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கெல்லாம் தலைமை பொறுப்பு தலைமைச் செயலாளர்தான். அவருக்கு அடுத்தபடியாக கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது 1997ஆம் ஆண்டு பேட்சைச் சேர்ந்த 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு செயலர் பதவியில் இருந்து முதன்மைச் செயலாளர் அந்தஸ்து உயர்வு வழங்கி தலைமைச் செயலாளர் இன்று (ஜனவரி 1) உத்தரவு பிறப்பித்துள்ளார்.


அதன்படி, வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை செயலர் அந்தஸ்த்தில் உள்ள கார்த்திகேயன் முதன்மைச் செயலராக அதே பதவியில் தொடருகிறார். பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை செயலர் அந்தஸ்த்தில் உள்ள ஸ்வர்ணா முதன்மைச் செயலராக அதே பதவியில் தொடருகிறார்.


டெல்லி தமிழ்நாடு இல்ல ஆணையர்-2 பதவி வகிக்கும் ஆசிஷ் வச்சானி முதன்மைச் செயலராக பதவி உயர்த்தப்பட்டு அதே பதவியில் தொடருகிறார். டான்ஜெட்கோ தலைவர் மற்றும் செயலர் பங்கஜ்குமார் பன்சார் முதன்மைச் செயலராக அதே பதவியில் தொடருகிறார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக பதவி வகிக்கும் சத்ய பிரதா சாஹு முதன்மைச் செயலராக பதவி உயர்வு பெற்று அதே பொறுப்பில் தொடருகிறார்.

read more: சசிகலா மீது புகாரளித்த ரூபா உள்துறைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கம்!


பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை (பயிற்சி) செயலர் அந்தஸ்த்தில் உள்ள ஹர் சஹய் மீனா முதன்மைச் செயலராக அதே பதவியில் தொடருகிறார்.வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை செயலர் அந்தஸ்த்தில் உள்ள பீலா ராஜேஷ் முதன்மைச் செயலராக அதே பதவியில் தொடருகிறார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version