காங்கிரஸிலிருந்து விலகுவது குறித்து நடிகை குஷ்பு அறிக்கை.
சமீப காலமாகவே காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு அக்கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
ஆனால் அது வதந்திகள் என்றும் பாஜவினர்தான் இந்த வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக குஷ்பு குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தன் கட்சித் தொண்ர்கள் 140க்கும் மேற்பட்டவர்களும் அவர் சென்னை முக்கிய சாலையில் போராட்டம் நடத்தினார். அப்போது கடுமையாக பாஜகவை சாடினார். அவர் உள்ளிட்ட அக்கட்சினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று குஷ்பு டெல்லி சென்று பாஜக தலைவர் நட்டாவைச் சந்தித்து அக்கட்சியில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் தற்போது காங்கிர்ஸ் செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து குஷ்பு நீக்கப்பட்டுள்ளார்.இதற்கான அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குஷ்பு இந்த முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.
இந்நிலையில் தற்போது குஷ்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தன்னை காங்கிரஸ் கட்சி அடைத்து வைத்துள்ளதாகவும், சில அதிகாரத் தலையீடல் உள்ளதாகவும், உண்மையாக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் தான் பதவி , பணம் , புகழ் பெறுவதற்காக காங்கிரஸில் இணையவில்லை என்று அதில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் டெல்லிக்குச் சென்று சோனியாகாந்தி, மற்றும் வேணுகோபாலைச் சந்திக்க குஷ்பு நேரம் கேட்டதாகவும், ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. எனவே தனது முடிவை சோனியாவுக்கு கடிதம் மூலமாக எழுதியுள்ளார் குஷ்பு.
குஷ்பு தற்போது எடுத்துள்ள முடிவுக்கு அவரது கணவர் சுந்தர்.சியின் பங்கு அதிகம் இருக்கலாம் என்றும், இது முழுக்க முழுக்க குஷ்பு தொடர்ந்து புறக்கப்பட்டதன் காரணமாக இம்முடிவை சுந்தர் .சி எடுக்க வைத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
எனவே காங்கிரஸீல் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் குஷ்பு விலகுவதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.