சிலிபர் செல், சட்டமன்ற உறுப்பினராக மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் இருக்கலாம் விரைவில் வருவார்கள் என்று டி.டி.வி தினகரன் ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கிறார்.
பெங்களூருவில் இருந்து நேற்று காலை சென்னை புறப்பட்ட சசிகலா இன்று சுமார் 23 மணி நேர கார் பயணத்திற்கு பிறகு அபிபுல்லா சாலையில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா இல்லத்திற்கு வந்தடைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமமுக துணை பொதுச்செயலாளர் டி டி வி தினகரன், நான்கு வருடமாக நான் சொல்லக் கூடிய சிலிபர் செல், சட்டமன்ற உறுப்பினராக மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் இருக்கலாம் விரைவில் வருவார்கள். மக்கள் மனதில் சசிகலா எந்த தவறும் செய்யவில்லை என்பது தான் இருக்கிறது, அதற்கு சாட்சி தான் இந்த இருபத்தி நான்கு மணி நேர வரவேற்பு.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துவங்க முக்கிய காரணம் அதிமுகவை மீட்டெடுப்பதற்கும், தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை நிலைப்பதற்கும் தான். மராமத்து பணிக்காக அதிமுக அலுவலகத்தை மூடி வைத்திருப்பதாக கேள்விப்பட்டோம், எங்களைப் பார்த்து, முதல்வர் துணை முதல்வர் பயப்படவேண்டாம் நாங்கள் அவர்களைப் போல் குறுக்கு வழியில் செல்ல மாட்டோம் என்று டி.டி.வி கூறினார். அதிமுகவிலிருந்து என்னிடம் நிறைய பேர் பேசினார்கள் அதை எல்லாம் வெளிப்படையாக கூற முடியாது. அமமுக தொண்டர்களுடன் அதிமுக தொண்டர்களும் சசிகலாவை வரவேற்றனர்.
கூவத்தூர் குறித்து ரகசியம் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். ஆர் கே நகர் உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன். சட்ட ரீதியாக ஆராய்ந்து சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்ட ஆலோசனை பெறப்படும். ஆளுமை என்கிற வார்த்தைக்கே அதிமுக வில் இடமில்லை. குருட்டு யோகத்தில் தவழ்ந்து வந்து பதவி பெற்றவர் பழனிசாமி. டெல்லிக்கு சென்றாலே அரசியல் காரணம் தான் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஜெயலலிதா நினைவிடத்தை திறந்தஉடன் சசிகலா அங்கு செல்வார் என்று டி.டி.வி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.