காதல் திருமணம் செய்த அதிமுக எம்எல்ஏவுக்கு எதிரான மனு நாளை விசாரணை…

கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாக கூறி பெண்ணின் தந்தை தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது.

பிரபு என்பவர் அதிமுகை சேர்ந்த எம்.எல்.ஏ இவர் கள்ளக்குறிச்சியில் எம்.எல்.ஏ வாக இருக்கிறார் என்பது குறிப்பிட தக்கது. இவர் டிஜிடெர்ர்னேடு காதலித்து திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இவர் சவுந்தர்யா என்ற கல்லூரி மாணவியை மணந்துள்ளார்.

இந்தநிலையில் இவருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தியாகதுருகத்தைச் சேர்ந்த அந்த பெண்ணின் தந்தை சாமிநாதன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது மகள் சவுந்தர்யா, திருச்செங்கோட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும், தன்னுடைய மகளை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஆசைவார்த்தை கூறி கடத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதைக்குறித்து போலீசார் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே தனது மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் அந்த பெனின் தகப்பனார். இந்நிலையில் சாமிநாதன் தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது.

Exit mobile version