பள்ளி விழாவில் ஓட்டுக்கு பிளான் தீட்டிய அதிமுக ஏம்.எல்.ஏ.. பதறிய ஆளும் கட்சியினர்..

பள்ளி விழாவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஓட்டுக்கேட்ட அதிமுக ஏம்.எல்.ஏ. தேன்மொழி சேகரால் சலசலப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்குவதற்காக நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர் பங்கேற்றார். அப்பொழுது, அந்த விழாவை தொடங்கி வைத்த நகர செயலாளர் ராஜசேகர், அதிமுக ஏம்.எல்.ஏ. தேன்மொழியை புகழ்ந்து தள்ளினார். அதில், பட்டிவீரன்பட்டி பகுதியில் அனைத்து திட்டங்கள் நிறைவேறியதற்கு காரணம் தேன்மொழி, அவர் பத்து பொன்னம்மாவுக்குச் சமம். அவர் தொடர்ந்து பணியாற்றிட வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.

அதன்பிறகு, மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கி பேசிய தேன்மொழி சேகர் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி, நீங்க பரிட்சை எழுதாமலேயே உங்களைப் பத்தாவது பாஸ் பண்ணி விட்டுவிட்டார். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு உங்கள் பெற்றோரிடம் சொல்லி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முதலமைச்சர் ஆவதற்கு ஆதரவளிக்கச் சொல்லுங்கள் என்று தெரிவித்தார்.

Read more – அதிமுக, திமுக பின்னால் ஏன் எல்லாரும் செல்ல வேண்டும் ? கூட்டணி ஆட்சி குறித்து கிருஷ்ணசாமி கருத்து

இந்த நிகழ்வால் அங்கு வந்த பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. அதிமுக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும் உண்டாகியது.

Exit mobile version