தொழில் உரிமத்தை டிசம்பர் 31-ந் தேதி வரை புதுப்பிக்கலாம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் தொழில் புரிவோர்கள் தங்களது தொழில் உரிமத்தை வரும் டிசம்பர் 31-ந் தேதி வரை புதுப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் தொழில் புரிவோர்கள் தங்களது தொழில் உரிமத்தை வரும் டிசம்பர் 31-ந் தேதி வரை புதுப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழில் உரிமம்
சென்னை மாநகராட்சி, வருவாய்த் துறையின் மூலம் நிறுவனங்களின் தொழில் உரிமம் 2020-2021ம் நிதியாண்டில், 31.03.2020-க்குள் புதுப்பிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தொழில் உரிமத்தை எவ்வித தண்டத்தொகையும் விதிக்கப்படாமல் புதுப்பிக்க ஏதுவாக 31.12.2020 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அவகாசம்: எனவே, நிறுவனங்கள் தங்களின் தொழில் உரிமத்தை 31.12.2020 வரை எவ்வித தண்டத்தொகையுமின்றி புதுப்பிக்கலாம் என ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Exit mobile version