கூட்டணி வேறு, கொள்கை வேறு: எடப்பாடி பழனிசாமி எதற்காக சொல்கிறார்?

அதிமுக கொள்கைப்படியே செயல்படும், சிறுபான்மையினருக்கு அரணாக இருக்குமென முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் விழா விரைவில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் சார்பில் நேற்று கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அதிமுக சார்பில் நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், கிறிஸ்தவ குருமார்கள் பங்கேற்றனர்.


விழாவில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையின்படி நாங்கள் நடப்போம். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. கொள்கைதான் என்றைக்கும் நிலைத்து நிற்கும். அந்தக் கொள்கையின்படியே கட்சி நடக்கும். அதன்படியே அதிமுக இயங்கிக் கொண்டிருக்கிறது என்றார்.

read more: கொள்ளையடித்த பணத்தில் ரூ. 2,000 தருகிறார்கள்: அதிமுகவை சொல்கிறாரா அண்ணாமலை


எந்த சிறுபான்மை மக்களும் அச்சப்படத் தேவையில்லை. அவா்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக இருக்கும் எனவும் உறுதியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கிறிஸ்தவா்கள் புனித யாத்திரைக்கு அரசின் சாா்பாக வழங்கப்படும் உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று, உதவித் தொகையானது ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.37 ஆயிரமாக உயா்த்தப்படும்” என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.


பாஜக கூட்டணிக்கு அதிமுக சென்ற பிறகு அக்கட்சிக்கு இருந்த சிறுபான்மையினர் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. இதனால்தான் கூட்டணி வேறு, கொள்கை வேறு. கூட்டணிப் படி செயல்படுவோம் என்ற விளக்கத்தை கிறிஸ்தவ நிகழ்ச்சியான கிறிஸ்துமஸ் விழாவில் முன்வைத்துள்ளார் முதல்வர்.

Exit mobile version