டிசம்பர் 14-ந் தேதி அம்பானி, அதானி பொருட்கள் புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்-மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அறிவிப்பு

டிசம்பர் 14-ந் தேதி அம்பானி மற்றும் அதானி பொருட்கள் புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மார்க்சிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று வெளியி்ட்ட அறிக்கயைில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் அழைப்பு
விவசாயிகளுடன் டிசம்பர் 9ல் பேச்சுவார்த்தை நடந்தபோது மத்திய அரசு ஆணவப்போக்கோடு நடந்துகொண்ட காரணத்தினால் விவசாய சங்க கூட்டமைப்பு போராட்டத்தைத் தீவிரப்படுத்த அறைகூவல் விடுத்துள்ளது.
டிசம்பர் 14 அன்று, டெல்லி மாநகரத்தின் அருகாமையில் இருக்கும் மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கிப் புறப்பட வேண்டுமென்றும், அதே தேதியில் இதர மாநிலங்களில் ஆதரவு இயக்கம் நடத்திட வேண்டுமென்றும் அறைகூவல் வந்துள்ளது.

அம்பானி, அதானி பொருட்கள் புறக்கணிப்பு
நாடு முழுவதும் அம்பானி, அதானி பொருட்களைப் புறக்கணிக்கும் இயக்கத்தின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் டிசம்பர் 14-ம் தேதியன்று ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட், பெட்ரோல் பங்க், ஜியோ விற்பனைக் கடைகள் முன்பு ரிலையன்ஸ் பொருட்களைப் புறக்கணியுங்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்திட தீர்மானித்துள்ளது. இதற்கு ஆதரவு தருமாறு அனைத்துப் பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கேட்டுக் கொள்கிறது”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version