பெண்களை இழிவுபடுத்தியதாக திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்றத் தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அரங்க நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி, மோடிக்கு எடுபிடியாக இருப்பதால் எடப்பாடி ஆட்சியை எடுபிடி ஆட்சி என்கிறோம் என விமர்சித்தார்.
அத்துடன், டெட்பாடி ஆட்சி என்றும் சொல்கிறார்கள். ஏனெனில் சசிகலா காலில் விழுந்தபோது டெட்பாடி போலதான் எடப்பாடி பழனிசாமி கிடந்தார் என்று விமர்சித்த அவர், டேபிள், சேர்குள்ளலாம் புகுந்து விழுந்து கிடந்தார் என்றதோடு, இன்னொரு வார்த்தையைக் கொண்டு விமர்சித்தார். அதற்கு நிர்வாகிகள் பலரும் சிரிக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், உதயநிதிக்கு கண்டித்து கருத்து தெரிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்தி பேசிய தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை மு.க.ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார். கண்ணியத்திற்கும் திமுகவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு இது இன்னொரு சாட்சி என்று கூறியுள்ளார்.
read more: அமைச்சர் காமராஜுக்கு ஆக்சிஜன் துணை தேவைப்படவில்லை: மியாட் மருத்துவமனை
நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர் சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாக பேச முடியும். தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டு பேசியிருக்கிறார். அவர் வந்த வழி அப்படி. பெண்களை பெரிதும் மதிக்கிற தமிழ்ச் சமூகத்தில் இத்தகைய குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிப்பதாக கண்டனம் தெரிவித்தார்.