மதுரையில் தவெக மாநாட்டிற்கு காவல்துறையினரிடம் அனுமதி பெறுவதற்காக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மதுரை வந்தாரா என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மதுரையை அடுத்த ஆவியூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பிரம்மாண்டமாக மாநாடு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மதுரை வந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மாவட்ட எஸ்பி அலுவலகம் அல்லது மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்துக்குச் சென்று மாநாட்டிற்கான அனுமதி குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பேச இருப்பதாகத் தெரிகிறது. தவெக மாநாடு குறித்தும், ஆதவ் அர்ஜுனா உயிருக்கு அச்சம் இருப்பதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் சிரித்துக் கொண்டே வணக்கம் அளித்தபடியே சென்றார் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த். மாநாட்டிற்கு அனுமதி கிடைக்கும் வரைக்கும் செய்தியாளர்களிடம் தகவல் பரிமாறக்கூடாது என்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் பொதுச் செயலாளர் ஆனந்த் வருகை தந்ததும் குறிப்பிடத்தக்கது.