தேர்தல் வியூகம்: ஏ,பி,சி என சட்டமன்ற தொகுதிகளை பிரித்த பாஜக!

தேர்தல் வெற்றியை கணக்கிட்டு சட்டமன்ற தொகுதிகளை மூன்று பிரிவுகளாக பாஜக பிரிந்துள்ளது.

நெல்லை வண்ணாரபேட்டை தனியார் திருமண மண்டபத்தில் பாஜக சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழக மேலிட பொறுப்பாளருமான சி.டி ரவி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சி.டி.ரவி, வரும் 30,31 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் பல கூட்டங்களில் தேசிய தலைவர் ஜே.பி நட்டா கலந்துகொள்கிறார் என்றார்.


மேலும், தமிழகம் முழுவதும் 234 தொகுதியிலும் போட்டியிடம் அளவுக்கு பாஜக வலுவாக உள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

read more: புதிய தலைவர் தேர்தல்: காங்கிரஸ் இன்று ஆலோசனை!


கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்ட பிறகு அடுத்த கட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என்ற ரவி, “தேர்தல் வெற்றி நிலவரத்தை கணக்கிட்டு தொகுதிகளை ஏ,பி,சி என மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளோம்.ஏ பிரிவு தொகுதிகள் பாஜக வெற்றி பெறும் அளவிற்கு பலமாக உள்ளது. பி பிரிவில் கட்சியைப் பலப்படுத்த வேண்டியுள்ளது. சி பிரிவில் பலவீனமாக உள்ளது. வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு பெற்று போட்டியிடுவோம்” எனவும் கூறினார்.

Exit mobile version