வாங்க ஒரு கை பாப்போம்: பிரச்சாரத்திற்காக தமிழகம் வரும் ராகுல் காந்தி

சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார்.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று தமிழகம் வருகிறார். திமுக – காங்கிரஸ் கூட்டணிக்காக அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.


ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் கோவை, திருப்பூர், ஈரோடு ,கரூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட ராகுல் 11 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். மூன்று நாட்கள் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு 25ஆம் தேதி மதுரையில் இருந்து டெல்லி செல்கிறார்.


ராகுல் வருகைக்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல், கொங்கு பகுதியில் எனது தமிழ் சகோதர சகோதரிகளுடன் நேரத்தை செலவிட இன்று தமிழ்நாட்டிற்கு மீண்டும் வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தமிழர்களின் தனித்துவமான கலாச்சாரத்திற்கு எதிராக மோடி அரசு நிகழ்த்தும் தாக்குதல்களை ஒன்றுசேர்ந்து தடுத்து பாதுகாப்போம் என குறிப்பிட்டார்.

read more: கொரோனா கால வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: ஸ்டாலின்


இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். அதில், நம்ம ராகுலுடன் ஒன்னா கை கோர்ப்போம். வாங்க, ஒரு கை பார்ப்போம்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

Exit mobile version