79 வது சுதந்திர தின விழாவை ஒட்டி சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தகைசால் தமிழர் விருது – பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனுக்கும், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது – இந்திய விண்வெளி ஆய்வு மையம் விண்வெளித் துறை & தலைவர் முனைவர் நாராயணனுக்கும், துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது – காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி, துளசிமதி முருகேசனுக்கும் வழங்கப்பட்டது.
சமுதாய பங்கேற்பு மூலம் மாற்றத்தைக் கொண்டுவரும் ஊரக மேம்பாட்டு முயற்சிகளுக்கான முதலமைச்சரின் நல் ஆளுமை விருதை உதவி கண்காணிப்பாளர் வி. பிரசன்ன குமாரும் வட்டாட்சியர் ப. பாலகிருஷ்ணனும், வட்டார வளர்ச்சி அலுவலர் யமுனாவும் பெற்றுக் கொண்டனர். கட்டிட வரைபட அனுமதிகளை எளிதாக்கியதற்காக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை காகர்லா உஷாவிற்கும், பழங்குடியினர் திராவிடர் மற்றும் நலத் திட்டங்களை செயல்படுத்தியதற்கான விருது லட்சுமி பிரியா, ஆணயர் ஆனந்திற்கும், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரைக்கும், தமிழ்நாடு திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கந்தசாமிக்கும், கண்ணாடிப் பாலம் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையைச் சார்ந்த செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனாவிற்கும், தமிழ் மொழியின் உலகளாவிய மேம்பாட்டிற்காக தமிழ் இணையக் கல்வி கழக இணை இயக்குநர் கோமகனுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த மாநகராட்சி விருதை ஆவடி மற்றும் நாமக்கல்லும் சிறந்த நகராட்சிக்கான விருதை ராஜபாளையம், ராமேஸ்வரம், பெரம்பலூரும் பெற்றன.