பாபர் மசூதி இடிப்பு வழக்கு: நீதியின் தூண்களை இடித்ததற்குச் சமம்! – வைகோ ! பதிலடி கொடுத்த ஹெச்.ராஜா

babar masjith

பாபர் மசூதி இடிப்பு வழக்கு குறித்த நேற்று வெளியான தீர்ப்பு குறித்து வைகோ விமர்சனம்.

அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, ஜோஷி கல்யாண் சிங், உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் மீதான வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி  யாதவ் நேற்றுத் தீர்ப்பளிப்பதாக செய்திகள் வெளியானதால் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

நாடே ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த இந்த வழக்கில் நீதிபதி எஸ்.கே.யாதவ்  தீர்ப்பு அளிக்கப்பதாக  மீடியாக்களில் செய்திகள் வெளியான நிலையில், நீதிபதி சுமார் 600 க்கும் மேற்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2000 பக்கங்களிலுள்ள  தீர்ப்பு வாசித்தார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அத்வானி, முரளி மனோகர் ஜோஷி , கல்யாண் சிங் , உமாபாரதி உள்ளிட்டோர் மீது சிபிஐ போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும்,  அதேசமயம் எல்.கே அத்வானி, முரளிமனோகர் ஜோஷி , கல்யாண் சிங் , உமாபாரதி உள்ளிட்ட 6 பேர்நேரில் நேரில் ஆஜராகவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 16 பேர் விசாரணைக் காலத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் , மீதமுள்ள 26 பேர் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது,

இந்நிலையில் நீதிபதி வாசித்துள்ள தீர்ப்பில் பாபர் மசூதி முன்கூட்டியே திட்டமிட்டு இடிக்கப்படவில்லை ; புகைப்படங்களைப் போதுமான ஆதாரங்களாகக் கருத முடியாது என்று கூறி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதுகுறித்துப் எதிர்க்கட்சித்தலைவர்கள், பிரபலங்கள் கருத்துகளை முவைத்தனர். அந்த வகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாபர் மசூதி வழக்கில் அனைவரும் விடுதலை செய்வது என்பது நீதியின் தூண்களை இடித்ததற்குச் சமம் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்து டுவீட் பதிவிட்டுள்ள ஹெச்.ராஜா, ஆமாம் எந்த ஆவணங்களும் இன்றி கள்ளத்தனமாக அந்நிய நாட்டிற்கு சென்றது அரசியல் சட்டத்தை இடித்ததற்கு சமம் இல்லையா? என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Exit mobile version