பீகார் சட்டசபை தேர்தல் நிலவரம் முன்னணியில் மெகா கூட்டணி!!!

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நிதீஷ் குமார் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும் (ஜே. டி. யு ), லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணி(ஆர். ஜே. டி ) நேரடி களத்தில் இருந்தன.

இவைகள்தவிர ராஷ்டிரீய லோக் சமதா கட்சி தலைமையில் ஒரு அணியும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்த மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனியாகவும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது.

38 மாவட்டங்களில் 55 இடங்களில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

தபால் வாக்குகள் முதலிலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் தொடர்ந்தும் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி (காலை 9 மணி)ஆர். ஜே. டி, காங்கிரஸ் கூட்டணி 80இடங்களிலும் ,ஆளும் ஜே. டி. யு 60இடங்களிலும் முன்னணியில் உள்ளன இன்று பிற்பகலுக்குள் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற முழு நிலவரம் தெரிந்து விடும்.

Exit mobile version