பீகாரில் ஆட்சியை பிடிப்பது யார்? கருத்து கணிப்பு வெளியீடு…

சூடு பிடித்து வரும் தேர்தல் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது இதனிடையே தேர்தலுக்கு முந்தைய சில கருத்து கணிப்பில் மக்கள் செல்வாக்கில் நிதிஷ்குமாரை தேஜஸ்வி யாதவ் நெருங்கிவிட்டார் என தெரிகிறது இது லாலு குடும்பத்திற்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.

பீகாரில் இந்த மாதம் 28-ஆம் தேதி முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்குகிற்கு பிறகு நடத்தப்படும் முதல் தேர்தல் என்பதால் இந்த தேர்தலுக்கு கூடுதல் செலவு ஆவதுடன் கூடுதல் கவனமும் செலுத்தப்படுகின்றது.இதில் யாருக்கு செல்வாக்கு உண்டு, யார் வெற்றி பெற வாய்ப்புண்டு என்பது குறித்து லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் கருத்து கணிப்பை நடத்தியுள்ளது.

இந்த கருத்துக் கணிப்பில் 31 சதவீதம் பேர் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக வேண்டும் எனவும் என்னதான் இந்த முதல்வர் பதவிக்கான கணிப்பில் நிதிஷ் முன்னணி வகித்தாலும் செல்வாக்கு என பார்க்கும் போது அவருக்கு சிறிது சரிவே காணப்படுகின்றது.

இதில் மற்றொரு சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு என்னவெனில் பீகார் முதல்வராக நிதிஷ்குமார் வரவேண்டும் என 31 சதவீத மக்கள் விரும்புகிறார்கள் எனவும் அதே வேளையில் தேஜஸ்விக்கு யாதவிற்கு 27 சதவீதம் பேரும், அவரது தந்தை லாலுவுக்கு 3 சதவீதம் பேரும் கருத்து கணிப்பில் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

ஆகமொத்தம் அவரது குடும்பம் சார்பாக 30 சதவீதம் அதாவது நிதிஷ் குமாரை விட 1 சதவீதம் மட்டுமே பின்தங்கியுள்ளனர். இந்த ஆதரவு தேர்தல் சமயத்தில் ஆதரவு நிலைப்பாடு மாறலாம். மேலும் நிதிஷ் பா.ஜ. க கூட்டணியில் இருப்பதால் அரசின் மீது உள்ள எதிர் வாக்குகள் தேஜஸ்விக்கு சாதகமாக அமையலாம் என அரசியல் விமசகர்கள் தெரிவிக்கின்றனர் எது எப்படியே தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றப்போகும் பீகார் மக்கள் கையில் தான் உள்ளது.

Exit mobile version