சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ கைது!!! காரணம் என்ன?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்திய போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மனுதர்மம் சார்பாக திருமாவளவனின் பேச்சை கண்டித்து அவருக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியினர் மாநிலமெங்கும் கண்டனம் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள். இந்த நிலையில் அதில் பங்கேற்க சென்ற சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சிதம்பரத்தில் பாஜக மகளிரணி நடத்தும் போராட்டத்திற்கு காவல்துறை தடை விதித்து. இந்த நிலையில் நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார். காரில் சிதம்பரம் நோக்கி சென்ற குஷ்புவை முட்டுக்காடு அருகே தடுத்து காவல்துறை கைது செய்தனர்.

மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையிலான போலீசார் குஷ்புவை தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version