தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த ஆட்சி முடிவதற்குள் சில முக்கிய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க திமுக அரசு முயற்சித்து வருகிறது. சமீபத்தில் இரு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய திட்டங்கள், தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.