மக்கள் நீதி மய்யத்தில் இருந்து தீடிரென விலகிய கமீலா நாசர்…

மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து கமீலா நாசர் விலகுவதாக தகவல் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2018 ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியை உருவாக்கி பல முக்கிய நிர்வாகிகளை கட்சியில் இணைத்தார். கட்சி தொடங்கிய ஆரம்ப காலத்தில் இருந்து மக்கள் நீதி மய்யத்தில் நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் முக்கிய தலைவராக இருந்து பணியாற்றி வந்தார்.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் போது மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மத்திய சென்னை பகுதியில் கமீலா நாசர் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். இருந்தும் தொடர்ந்து அக்கட்சியில் சென்னை மண்டலத்தின் மாநில செயலாளர் பதவி வகித்தார்.

Read more – கொரோனா தொற்று வீரியத்தால் தீவிர முடிவெடுத்த தமிழக அரசு… தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய உத்தரவு..

இந்தநிலையில், கமீலா நாசர் தனது பதவியை ராஜினாமா செய்ததோடு அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகவும், தனிப்பட்ட காரணத்திற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சார்பில் மநீம கட்சியின் பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து கமீலா நாசரை விடுவிப்பதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version