சென்னையில் பணியமரப்போகும் புதிய கலெக்டர்

தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவின்படி :- சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி, எழுதுபொருள் அச்சுத்துறை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளதால், எழுதுபொருள் அச்சுத்துறை இயக்குனராக இருந்த அருணா, சென்னை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். சத்தீஷ்கார் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக 2019-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட லலித்தாதித்யா நீலம், அதே ஆண்டு தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பிருந்தாவை திருமணம் செய்வதை முன்னிட்டு, சத்தீஷ்கார் மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு பணி மாற்றம் செய்யப்பட்டு ள்ளார். தமிழகத்துக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சேலம் ஸ்டார்ச் மற்றும் சாகோ (ஜவ்வரிசி) உற்பத்தியாளர்கள் சேவை தொழில் கூட்டுறவு சங்க (சாகோசெர்வ்) மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version