சிவகங்கை தொகுதியில் ப. சிதம்பரம் 2009 ல் பெற்ற வெற்றி உறுதி… உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதி…

சிவகங்கை தொகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை :

சிவகங்கை தொகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனை விட மூவாயிரத்து 354 அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதை எதிர்த்து ராஜகண்ணப்பன் தொடர்ந்த வழக்கின் விசாரணை கடந்த பத்து ஆண்டுகளாக நீடித்த நிலையில் இன்று இறுதியாக நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது,
2009 ல் சிவகங்கை மக்களவை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கி உள்ளார்.

Read more – அதிமுக கட்சிக்கு ஸ்டாலின் இலவச பிரச்சாரம்.. அவரின் தொகுதி பிரச்சாரமே அதற்கு அச்சாரம்… ஸ்டாலினை போட்டு வாங்கும் கடம்பூர் ராஜு

மேலும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ராஜகண்ணப்பன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version